Share via:
தினந்தோறும் 300 முதல் 400 பேர் டெங்கு காய்ச்சலால்பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பூவிருந்தல்லி அருகே 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை (அக்.17) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேசும்போது, ‘‘தினமும் 300 முதல் 400 பேர் டெங்குவால் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வேளையில் தான் பூவிருந்தவல்லி அருகே 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உழிரிழந்துள்ளான் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் தமிழகம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக¬ளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.