News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா, பொருளாளர் திரு. சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் திரு.வி.பி. மணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி, வணிகவரி ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் திருமதி பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link