Share via:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு.டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞர் திரு. தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு. கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்குரைஞர் திரு. ஷாஜகான் ஆகியோரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு தலைமைக் திரு. அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.