Share via:
தமிழகத்தின் அடுத்த காங்கிரஸ் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வரும் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்தநிலையில் புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ள தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று சென்னை வந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் மாநாட்டில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதற்கிடையில் சோனியா காந்திதலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி, கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் அடுத்த காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை தேர்வாக அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.