News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளார்.

 

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

 

உரிமைத் தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

இதில் சில கிராமத்தில் பெண்கள் தங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சாலை மறியலிலும், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும், மேல்முறையீடு செய்துள்ளவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் விரைவில் ரூ.1,000 வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கவ லியுறுத்தி விழுப்புரத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற உள்ளது. இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் வருகிற 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link