Share via:
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.800 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அக்டோபர் மாத முதல வாரத்தில் குறைந்து காணப்பட்ட நிலையில் சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. இஸ்ரேல்& ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் இன்று 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதன் தாக்கம் தற்போது தங்கத்தின் விலையில் எதிரொலித்துள்ளது.
அதன்படி வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து. கடந்த வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.5,414க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.43,320க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக்.13) ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு சவரனுக்கு ரூ.800 அதிகரித்தது. எனவே ஒரு கிராம் ரூ.5,510க்கும ஒரு சவரன் ரூ.44,080 ஆக விற்கப்பட்டது.
அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி விலையும் ரூ.1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிலோவிற்கு ரூ.1,500 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மற்றும் தங்கம் மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இஸ்ரேல் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.