News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சுற்றுலாதலங்களில் பொது மக்கள் தங்கள் பிள்ளைகளின் காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி ஆண்டுத்தேர்வு விடுமுறைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் தற்போது அந்த நடைமுறை மாறி வார இறுதிநாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். 


ஒரே நேரத்தில் அனைவரும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பதால், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.


இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை வந்தது. அப்போது, சுற்றுலாதலங்களில் வார விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் குறிப்பாக மலைப்பாதைகளில் நிலவும் போக்குவரத்து பாதிப்புகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும் வாதம் முன் வைக்கப்பட்டது.



இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், போக்குவரத்து நெரிசலையும், விபத்தையும் தடுக்க மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இது குறித்த கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு விரைவில் வெளியிட்டு அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link