Share via:
2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் பிரபலமான பல விளையாட்டு போட்டிகள் இருந்தாலும் கிரிக்கெட்டுக்கான மவுசு அதிகம்தான்.
2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் கிரிக்கெட் போட்டியுடன் சேர்த்து ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து ஒலிம்பிக்கில் இதே வெற்றி தொடரும் என்கிறார்கள் ரசிகர்கள்.

