News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் காரணமாக பொதுமக்கள் கையில் ரொக்கம் வைத்துக் கொள்ளாமல் யு.பி.ஐ.மூலம் பணத்தை செலுத்தி வருகின்றனர். அதன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் யு.பி.ஐ. வசதியே நடைமுறையில் உள்ளது.

 

ரேஷன் கடைளில் யு.பி.ஐ. வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாட்டு கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் உளள நியாயவிலைக் கடைகளில் கூகுள்பே, பேடி எம் போன்ற யு.பி.ஐ. வசதி மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

 

இந்நிலையில் இதன் முதல்கட்டமாக சென்னையில் உள்ள 1,500 ரேஷன் கடைகளிலும், புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் 562 ரேஷன் கடைகளிலும் யு.பி.ஐ. பணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகம் மேற்கொள்ளும் பொதுமக்கள் மத்தியில் இச்செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link