News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் நம் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ள மகளிருக்கு நம்பிக்கை தரும் விதமாக பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயனடைந்து வரும் நிலையில், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்களின் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.

 

அதன்படி சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது தொடர்பாக, துணை ஆட்சியர்கள் – சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களுடன் கலந்துரையாடினோம். அப்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

வருகிற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளையே (அக்.14) ஒரு நாள் முன்கூட்டியே மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுவிடும் என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link