Share via:
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உலகக்கோப்பை போட்டியை ரசிகர்கள் காண்பதற்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய ஆட்டத்தில் (அக்.13) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.
இதனையொட்டி கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பநப்தம் கையெழுத்தானது. அதன்படி ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்தை விட கூடுதலான நேரத்தில் இயக்கப்படுகிறது. அதாவது இரவு 12 மணி நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சேவையை கிரிக்கெட் ரசிகர்கள் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.
இருப்பினும் இச்சலுகை போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது பொருந்தாது என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நீலவழித்தடத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஓமந்தூரார் அரசினர தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் மற்றும் விம்கே நகர் பணிமனை மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
பச்சை வழித்தடத்தை பொறுத்தவரையில் 15 நிமிட இடைவெளியில் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. அதே வேளையில் இரவு 11 மணி முதல் 12 மணிவரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடத்திற்கு மாறுவதற்கான ரெயில் சேவை இயக்கப்படாது என்று அறிவித்துள்ள மெட்ரோ ரெயில் நிறுவனம் இவ்வனைத்து தகவல்களையும் பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்கள் இனிமையான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.