Share via:
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு நேற்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்த நிலையில் இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.
அதன்படி சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சந்தீப் நந்தூரி தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
வணிக வரி முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனரான ஜெயஸ்ரீ முரளிதரன், தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு , பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரான காகர்லா உஷா தற்போது சுற்றுலாத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.