News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

தமிழக பா.ஜ.க. 9 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அண்ணாமலை தெரிவித்ததற்கு, டெபாசிட் ஆவது வாங்குவீர்களா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் கடுமையாக உழைத்து வருகிறது. ஏற்கனவே தமிழக பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க. கட்சி அதிரடியாக வெளியேறி அதன் பலத்தை குறைத்துள்ளது.

 

இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 9 தொகுதிகளை குறிவைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி இருப்பதாகவும், அந்த 9 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும்வோம் என்று கூறியிருந்தார்.

 

இதனை கிண்டல் செய்யும் விதமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ‘‘இருந்த கூட்டணியும் முறிந்துபோய் நடுத்தெருவில விற்கிறோமே என்று சொந்த கட்சியினரே புலம்பிக் கொண்டிருக்கும் போது தனித்து நின்று 9 தொகுதிகளில் எப்படி ஜெயிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும் ஜெயிப்பது இருக்கட்டும். முதலில் 9 தொகுதிகளிலாவது டெபாசிட்டை வாங்க முடியுமா? என்பதை பா.ஜ.க. சிந்திக்க வேண்டும்’’ என்று நகைச்சுவை கலந்த வார்த்தைகளால் பேசியுள்ளார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில் கே.எஸ்.அழகிரியின் இந்த பேச்சு சற்று யோசிக்கத்தான் வைக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link