News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த செந்தில்குமாரி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவுடைய கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

4. சென்னை காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ்., திருநெல்வேலி நகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

5. காவலர் பயிற்சி அகாடமியின் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் சிவில் சப்ளை சி.ஐ.டி.யுடைய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

6. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஐ.ஜி. திஷா மிட்டல் சென்னை காவல்துறையின்கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த இவர், காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

7.சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த அபிஷேக் தீக்சித், இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

8. சென்னை காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக சாமுண்டீஸ்வரி இருந்து வந்தார். இவர் தற்போது காவல்துறை தலைமையக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

 

9. திருவாரூர் மாவட்டத்தின் எஸ்.பி.சுரேஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

10 தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாம்சன் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு புலனாய்வு பிரிவின் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

11. சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

12. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த பிரபாகர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

13. கரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்துவந்த சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 

14. அதே போல கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்து வந்த ஹரிகிரன்பிரசாத் ராமநாதபுரம் கடலோர காவல் எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

15. ராமநாதபுர கடலோர பாதுகாப்பு குழு எஸ்.பி.யாக இருந்த சுந்தரவடிவேலு இடமாற்றம் செய்யப்பட்டு நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

16. காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த ஐ.பிஎஸ். தீபாசத்யன் காவல்துறையுடைய தலைமையக நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link