Share via:
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்த ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்தவேளையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிட்ட போது நாளை (அக்.11) விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.