Share via:
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு லியோ படத்தின் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி திரைப்படம் 19ம் தேதி வெளியாகும் அன்று அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி என 2 காட்சிகள் திரையிடப்படும். அதேபோல் அடுத்த நாளான அக்டோபர் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள், விஜயதசமி, ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையில் லியோ திரைப்படம் 5 நாட்கள் திரையிடப்பட உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.