News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சட்டமன்ற தேர்தலில் தனது கணவர் சந்திரசேகரராவ் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் அவரது மனைவி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டையடித்து கொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு வருகிற நவம்பர் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது.

அதன் எதிரொலியாக நேற்று முன்தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மனைவி ஷோபா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செய்த நிலையில் அங்கு நடந்த தோமாலை, அர்ச்சனை சேவையில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் அவருக்கு கோவில் பிரசாதங்களை வழங்கி ஆசிர்வாதம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி சென்ற அவர், சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனது கணவரான சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டும் எனறு வேண்டிக் கொண்டுதான் அவரது மனைவி ஷோபா மொட்டையடித்துக் கொண்டார் என்று பேச்சு எழுந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link