Share via:
சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் இந்தியாவுக்கான ஒரு நாள் இங்கிலாந்து தூரக உயர் அதிகாரியான நிகழ்வு பாராட்டுகளை குவித்து வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் ஒரு நாள் தூதரக உயர் அதிகாரி என்ற போட்டியை நடத்தி வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரேயா தர்மராஜன் என்ற 21 வயது இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார். இவர் டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று, மும்பையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை¬யாக பணியாற்றி வருகிறார்.
இந்த வெற்றியின் மூலம் ஸ்ரேயா தர்மராஜன் ஒருநாள் முழுவதும் இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக உயர் அதிகாரியானார். ஒருநாள் தூதரக உயர் அதிகாரி போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7வது வெற்றியாளர் ஸ்ரேயா தர்மராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.