Share via:
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூடையாக பணம் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி என 70க்கும் மேற்ப்டட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமானவரித்துறையினர் அறிவித்தனர்.
இந்நிலையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது அங்கிருந்த பிணவறையில் இருந்து மூட்டை மூட்டையாக பணத்தை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரையில் வெளி வரவில்லை.
இருப்பினும் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.