News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது பயணிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.


தீபாவளி பண்டிகை அடுத்த மாதமான நவம்பர் 12ம் கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல நினைக்கும் பயணிகள் முன்கூட்டியே அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுவார்கள். அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (அக்.11) தொடங்கியுள்ளது.


30 நாட்களுக்கு முன்பாக தொடங்கும் இந்த முன்பதிவு வசதியை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி நவம்பர் 10ம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவரகள் இன்று (அக்.11) முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவம்பர் 11ம் தேதி பயணம் மேற்கொள்வோர் நாளை (அக்.12) டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.


மேலும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலமும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வரும் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விரைவு பயணம் மேற்கொள்ளவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link