Share via:
பா.ஜ.க.வில் இருந்து பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு சாதியில் இருந்தும் முக்கியமான நபரை தனது கட்சிக்குள் இணைத்து பட்டியல் அணி தலைவராக நியமித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தற்போது பட்டியல் அணி துணைத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தது அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் பெரிய சறுக்கல் என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்டதில் இருந்து அக்கட்சிக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது. அண்ணாமலைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லப்படும் நிலையில் பட்டியல் அணி மாநில துணைத் தலைவரான பாண்டியன் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
பாண்டியன் அளித்த ராஜினாமா கடிதத்தில், ‘‘பா.ஜ.க.வில் இருக்கும் சாதிய பாகுபாடு நவீன தீண்டாமை என்று குறிப்பிட்டுள்ள அவர், பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் பட்டியல் அணி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அழைக்காத தனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.