Share via:
தமிழக சட்டப்பேரவைக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.
சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடிய நிலையில் கர்நாடக அரசை காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி ஒன்றிய அரசை உத்தரவிடக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக கொண்டு வந்தார்.
இதற்கிடையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையில் நேரில் காண்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுத் தலைவர் மில்டன் டிக் தலைமையிலான குழுவினர் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்று உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் திட்டங்கள் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளாலும் கவனிக்கப்பட்டு வருவதோடு அமல்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்தான் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற குழுவினர் தமிழகத்திற்கு வருகைபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.