News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


துவண்டு போயிருந்த பாலிவுட் திரையுலகத்தை நடிகர் ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் தூக்கி நிறுத்தியது. இவ்விரு திரைப்படங்களும் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


இதைத்தொடர்ந்து இவ்விரு படங்களுக்கு பிறகு தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான் மகாராஷ்டிர காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றை அளித்தார். அதைத்தொடர்ந்து அம்மாநில அரசுக்கு, நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.


பதான், ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் திரைத்துறை மற்றும் அதன் பின்னால் பணியாற்றிய அனைத்து தரப்பினரின் வாழ்விலும் மறுமலர்ச்சி கொண்டு வந்த ஷாருக்கானுக்கா இந்த நிலைமை என்று ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link