Share via:
சேப்பாக்கம் தொகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதிதாக கட்டப்பட உள்ள குடியிருப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் கடந்த 1979ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டுகளில் 392 வீடுகள் கட்டப்பட்டன.
இந்த வீடுகள் அனைத்து பழுதடைந்த காரணத்தால் அதற்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தொடர் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கான அரசாணையை பிறப்பித்தது.
அதன்படி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.75.92 கோடி மதிப்பீட்டில் 450 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கனவு இல்லத்தை பெற உள்ள பயனாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.