Share via:
தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன் வீட்டில் 5வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், அரக்கோணம் தொகுதி தி.மு.க.எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 5ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை தொடங்கிய சோதனை இன்று 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, நட்சத்திர விடுதிகள், மதுபான ஆலைகள் என 50க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிறது.
இதற்கிடையில் ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கமான பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டிலும், உறவினரான பாலசுப்பிமணியம்ஜெயா மற்றும் குப்புசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வரும் பரணி பில்டர்ஸ் என்ற நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இங்கும் 2 கருப்பு பைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு மட்டுமல்லாமல், பாரத் பல்கலைக்கழகம், பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவிதா குழுமம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
