News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் அதன் அமைப்புகளையும் கண்டித்து வருகிற 11ம் தேதி டெல்டா  மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என  காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.


தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும் கூட அதனை ஏற்க மறுத்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினரும், விவசாய அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், ரெயில் மறியல், தர்ணா என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இதன் காரணமாக பெங்களூர், மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவும் அடிக்கடி பிறப்பிக்கப்பட்டு வருவதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.


இந்நிலையில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் வருகிற 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதில் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக மாநில பா.ஜ.க.வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் மத்திய அலுவலகத்தின் முன்பாகவும் போராட்டம் நடைபெறும் என்று காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link