News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்கள் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் நட்பான உயிரினமாகும். அறிவுத்திறமை கொண்ட டால்பின்கள் மனிதர்களுடன் நட்புடன் பழகுவதில் முதல் இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில பழம், மாநில விலங்கு என தனித்தன்மை உண்டு. அதன்படி உத்தரபிரதேசத்தின் மாநில நீர்விலங்காக டால்பினை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினார்.

உத்தரபிரதேசத்தில் மட்டும் 2 ஆயிரம் எண்ணிக்கையில் டால்பின்கள் கங்கை, சம்பல், கோக்ரா, யமுனை, ராப்ரி, கெருவா உள்ளிட்ட நதிகளில் வாழ்ந்து வருகின்றன. எனவே டால்பின்களை நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளார். எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை நீர்நிலைகளில் வீசுவது உள்ளிட்ட மாசுபடுத்தும் காரியங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link