Share via:
அரசுப்பணிகளில் மகளிருக்கு 35% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு இன்ப அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேசத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இங்கு மகளிர் மத்தியில் நற்பெயரை பெறும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு மத்தியபிரேதச அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஏற்கனவே இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு வி திகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மகளிருக்கு அரசுத் துறையில் 35 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் வனத்துறையில் இந்த ஒதுக்கீடு செல்லுபடியாகாது.
அதன்படி மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பா.ஜ.க.வும், பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றி பெற காங்கிரசும் மகளிரையே குறியாக வைத்துள்ளனர். மகளிருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். ஏனென்றால் அம்மாநிலத்தில் 2.6 கோடிக்கும் அதிகமாக பெண் வாக்காளர்கள் இருப்பதால் இப்படிப்பட்ட முன்னெடுப்புகளை இரு பெரும் கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது பா.ஜ.க. தலைமையிலான மத்தியபிரதேசத்தில் அரசு வேலைகளில் மகளிருக்கான 35% இட ஒதுக்கீடு அம்மாநில பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எப்படிப்பட்ட வாக்குறுதிகளை அளிக்க உள்ளனர் என்பதை அம்மாநில மகளிர் உற்றுநோக்கி வருகின்றனர்.
