News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் உறுதியாக வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இத்திரைப்படத்தில் மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி, மேத்யூதாமஸ் என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்து முடித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகளவில் லியோ வெளியாக உள்ளது.

திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான நிலையில், பெரிய ஸ்கிரீனில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை உறுதி செய்யும் வகையில் இசைமையப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘சம்பவம் உறுதி’ என லியோ டிரெய்லர் குறித்து தனது அப்டேட்டை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே லியோ திரைப்படத்தின் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி சமூகவலைவளத்தில் டிரெண்டிங்கான நிலையில் டிரெய்லருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ திரைப்படத்தின் படப்பூஜை 2 நாட்களுக்கு முன்னர் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link