News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ திரைப்பட பூஜை மிகவும் எளிமையாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முன்னரே இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத்பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகாசிங் என நட்சத்திரபட்டாளமே நடிக்க உள்ளனர்.

திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் விமான நிலையத்தில் ரஜினிகாந்தின் பேட்டி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் திரைப்படத்தின் படப்பூஜை மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்த நடிகர் ரஜினிகாந்த் மிகவும் இளமையாக காட்சியளித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். படப்பூஜையின் போது இயக்குனர் ஞானவேல் ராஜா, மஞ்சுவாரியர், சார்பட்டா பட புகழ் நடிகர் சுந்தர், ரக்சன் உள்ளிட்ட படக்குழுவுடன் சேர்ந்து ரஜினிகாந்த் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அவை தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link