News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த 29ம் தேதி பெய்த கனமழையின் போது சைதப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் பலர் மழைக்காக ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.


யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதன் அடியில் நின்று கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புத் துறையினர் கிரேன் உதவியுடன் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மதுராந்தகத்தைச் சேர்ந்த 63 வயதான கந்தசாமி என்பவர் உயிரிழந்தார். இவர் சம்பந்தப்பட்ட அந்த பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.


இது குறித்து அஜாக்கிரதையாக செயல்பட்டதாக 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் தலைமறைவானார். ஏற்கனவே மேலாளர் வினோத் கைது செய்யப்பட்ட நிலையில் உரிமையாளர் அசோக்குமாரை போலீசார் தேடி வந்தனர்.


இந்நிலையில் இன்று (அக்.4) பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞருடன் வந்து சரணடைந்தார். தலைமறைவாக இருந்த அசோக்குமார் தற்போது சரணடைந்ததை தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link