News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் இந்திய சட்டமேதை அம்பேத்கருக்கு வருகிற 14ம் திறக்கப்பட உள்ளதாக ஏ.ஐ.சி. தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் சட்டமேதை என்று அழைக்கப்படுவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பின் பிறப்பிடமான அம்பேத்கர் சமத்துவத்தின் தந்தை என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

 

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் அம்பேத்கரின் 19 அடி உயர சிலை வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏ.ஐ.சி.) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இச்சிலை நிறுவப்பட உள்ளது.

 

இச்சிலையை உருவாக்கியவர் புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார். இவர் ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை உருவாக்கியவர் ஆவார். அம்பேத்கரின் புதிய சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

அம்பேத்கருக்கு பல்வேறு இடங்களில் சிலை அமைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் இது மிக உயரமான சிலை என்று கூறப்படுகிறது. 

 

அண்ணல் அம்பேத்கரின் 19 அடி உயர சிலை திறப்பு விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது குறித்து ஏஐசி கூறும்போது, இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் போதனைகளை பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாகவும் விளங்கவும் உதவும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link