Share via:
நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார்.
கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு செய்துள்ளது. வருடந்தோறும் ஒரு பெண்ணை தேர்வு செய்து கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜை நடத்துவது (நாரி பூஜை) வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த வருடம் குஷ்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, ‘‘திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோவிலில் நடைபெற்ற நாரிபூஜை செய்ய நான் அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கே அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தெய்வமே என்னை அழைத்ததாக நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவில் நிர்வாகத்திற்கு எனது பணிவான நன்றிகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது குஷ்புவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி லைக்குகளை வாரி குவித்து வருகிறது.