News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணராவிரத போராட்டத்தை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 125 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் மற்ற இடை  நிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தாங்கள் பட்டினி கிடப்பதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் இல்லத்தில் நடைபெற்று வரும் இப்பேச்சுவாரத்தையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link