Share via:
சென்னையில் இயங்கி வரும் பிரபல மாலின் எஸ்கலேட்டரில் தனது மகள் சிக்கி உயிர் பிழைத்ததாக ஷெப் வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல சமையல் கலை நிபுணரான ஷெப் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். ஆரம்ப காலத்தில் இவர் மிகவும் ரூடானவர் என்று ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக மிகவும் நகைச்சுவையாக அந்நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் இன்ஸ்டா பக்கதத்ல் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு தனது மகளை அழைத்து சென்றதாகவும், அங்கிருந்த எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தனது மகளின் கால் காலணியுடன் சேர்த்து மாட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு எஸ்கலேட்டரில் மகளின் காலணி துண்டாகி அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் என்று பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான இணையவாசிகள், தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னையின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு விளங்கி வரும் பீனிக்ஸ் மாலில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு இருக்கிறதா? என்றும் இனி குழந்தைகளுடன் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் சொன்னதாக தெரியவில்லை. தற்போது வெங்கடேஷ் பட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
