Share via:
மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவரது திருவுருவ சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல் சென்னை வடபழனியில் அமைந்துள்ள தியாகி ஜோதி என்.கண்ணனின் இல்லத்திற்கு அகில இந்திய பொதுச்செயலாளர் நேரில் சென்று தியாகி அவர்களுக்கு வேஷ்டி மற்றும் சட்டை வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் தென்சென்னை வடக்கு திரு.க. அப்புனு, தென்சென்னை தெற்கு தாமு, தென் சென்னை தெற்கு இளைஞரணி தலைவர் உதயா, தென் சென்னை தெற்கு தொண்டரணி தலைவர் பிரசாந்த் மற்றும் வட்டம், பகுதி, கிளை, மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
