News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பள்ளி வகுப்பறை மேஜையில் தாளம் போட்டு பாட்டு பாடி வெளியான மாணவர்களின் வீடியோவை கேரள மாநில கல்வித்துறை மந்திரி மனதார பாராட்டியுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.


பள்ளி மாணவர்கள் பல்வேறு திறமைகளை தங்களுக்குள்ளே மெருகேற்றி வளர்த்துக் கொள்வார்கள். இசை, விளையாட்டு என பல்வேறு திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தும் போது அவர்களை அரவணைத்து, ஊக்கப்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக இருப்பது பள்ளி ஆசிரியர்கள் என்றும் கூட சொல்லலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஒரு படி மேலே போய் கேரள கல்வித்துறை மந்திரி ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டுள்ளார்.


கேரள மாநிலம் திருவாங்கூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவர்கள் தங்களிடம் உள்ள பேனா, பென்சில்களைக் கொண்டு மேஜையில் தாளம் போட்டு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினார்கள். இதனை அங்கே மறைந்திருந்த ஆசிரியர் ஒரு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.


இந்த வீடியோவை பார்த்து மெய் மறந்து போன அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன் குட்டி தனது  வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link