Share via:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்களை திறந்து வைத்து அனைவரது கருத்தும் முக்கியம் அவை பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டஙகள் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்து உரையாற்றினார்.
அவர் பேசும்போது, ‘‘மக்களாட்சி முதல் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான் முறையாக எந்த தடையும் இன்றி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர்கள் அடையாளமாக சொல்கிறார்கள். ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு பறைசாற்றுகிறது. கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன் ஆகியவற்றின் கிராமசபை கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமா பணிகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கூட்டத்தில் அனைவரது கருத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
