News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் எப்போது என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்சிங் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


இத்திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையின் போது (2024ம் ஆண்டு) திரையிடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அதே நாளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ திரைப்படமும் வெளியாக உள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் லால் சலாம் படத்தில் முக்கிய திரைப்படத்தில் நடித்திருப்பதால், அயலான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று திரையுலகினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.


இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதே நேரத்தில் படத்தின் டீசர் குறித்து சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதில், அயலான் திரைப்படத்தின் டீசர் வருகிற (அக்டோபர்) 6ம் தேதி வெளியாகும் என்றும், இந்த டீசரை தயாரிக்கும் பணியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இத்திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link