Share via:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் மலர்களால் சூழவைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இவர்களை தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள், பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் ஒன்று சேர மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.