News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையில் செல்லும் புறநகர் மின்சார ரெயில் சேவை இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.


சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்தாக திகழ்வது மின்சார ரெயில்கள்தான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்கும் பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது மின்சார ரெயில்கள்தான். அதன்படி இயக்கப்படும் ரெயில்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.


இந்நிலையில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் மின்சார ரெயில் சேவை இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.45 மணிவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில், ‘‘பராமரிப்பு பணி காணமாக இந்த தற்காலிக சேவை நிறுத்தம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதனால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான ரெயில்கள், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link