Share via:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென்று சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘‘காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது தெரிவித்ததாக கூறினார்.
மேலும் தேசிய நதிகளை இணைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியதாக பிரேமலதா தெரிவித்தார்.
இருப்பினும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்குமா என்றும், அதன் ஒத்திகையாக இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதா என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
