Share via:
காவிரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், கன்னட விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூர் நகரங்களிலும், கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் திரைப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் விழா மேடையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திரைத்துரையினர் மத்தியிலும் தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று காலை (செப்.30) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நாம் தமிழர் கட்சியினர் முன்னெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்தார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதால் அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை வைத்து கன்னட அமைப்பினர் மாலையிட்டு திதி கொடுத்த சம்பவம் பெரும் கண்டனத்தை பெற்ற நிலையில் யாரும் பெரிய அளவில் இப்பிரச்சினை வெடிக்கவில்லை.
இதற்கிடையில் காவிரி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் களமிறங்கியுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
