Share via:
ஆளுநர் ஆர்.என்.வி. தமிழக அரசை மீண்டும் வெளிப்படையாக விமர்சனம் செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்துவதில் தொடங்கி, தமிழ்நாடு, தமிழகம் என்று அழைக்கும் சர்ச்சை என பல்வேறு எதிர்மறை எண்ணங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசை மீண்டும் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். ராஜபாளையத்தில் நடைபெற்ற விழாவில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுடன் ஆளுநர் ஆர்என் ரவி கலந்துரையாடிய போது தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அப்போது பேசிய அவர், ‘‘மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளன என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் வீடு கட்டும் திட்டத்தில் 40% நிதி பயன்படுத்தப்படவில்லை -என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது என்றும், 2 ஆண்டுக்கு முன் பட்டியலின பெண் பஞ்சாயத்து தலைவியாக தேர்வானாலும் இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் நிலைமை இப்படி இருக்க தமிழக அரசு எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும் என ஆளுநர் ஆர்என் ரவி பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.