News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று முதல் (செப்.29) ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாய்  வாங்கப்படாது என்ற அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது.

அரசு பேருந்துகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் பயணத்தின் போது பயணிகளிடம் இருந்து வாங்கப்பட்டு மாற்றி கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு பேருந்துகளில் தற்போது பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் தங்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்ததால் எந்த பாதிப்பும் அறியப்படவில்லை.

இந்நிலையில் அரசு பேருந்துகளைத் தொடர்ந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகளிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய்களை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தால் அவர்களுக்கு இந்த செய்தி மிகவும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கண்டிப்பாக தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link