News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

டி.எம்.பி. எனப்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும் சி.இ.ஓ.வுமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிர்வாக இயக்குனராகவும் சி.இ.ஓ.வாகவும் நியமிக்கப்பட்ட எஸ்.கிருஷ்ணன், கடந்த ஜனவரி மாதம் சிறிய வங்கிகளில் சிறந் வங்கியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதையும் பெற்றிருந்தார்.

எஸ்.கிருஷ்ணா அளித்த ராஜினாமா கடிதத்தை அவ்வங்கியின் நிர்வாகக்குழு ஏற்றுக் கொண்டதாகவும், இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.கிருஷ்ணனின் ராஜினாமா குறித்து கிடைத்துள்ள முதல்கட்ட தகவல்படி, அவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் சமீபத்தில் கார் ஓட்டுனர் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய்  தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாகத்தான் எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பாரோ என்ற சந்தேகமும் உள்ளது. மேலும் வங்கியின் தலைமையில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link