Share via:
0
Shares
விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் தளங்கள் மற்றும் இதுவரை யாரும் அறிந்திடாத சுற்றுலாத் தலங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப மாபெரும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு புகைப்படக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்து தங்கள் படைப்புகளை போட்டிக்காக சமர்ப்பித்தனர்.
அந்த வகையில் போட்டியின் முடிவுகள் இன்று வெளியான நிலையில், புகைப்பட கலைஞர் முத்துராஜ் என்பவர் மூன்றாம் பரிசு பெற்றார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.10 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.
புகைப்படக் கலைஞர் முத்துராஜ் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
Tagged latest