Share via:
சென்னை தியாகராயநகரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதைக் கண்ட பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திகைத்துப்போய் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மற்றும் புறநகர்களில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே சிறிய அளவிலான பள்ளம் ஏற்படுகிறது. மேலும் பருவமழையை எதிர்கொள்ள சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் தியாகராயநகரில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தியாகராயநகரில் உள்ள முக்கிய சாலைகளான கோபதி நாராயணா சாலை மற்றும் சர் தியாகராய சாலைகளை இணைக்கும் டாக்டர் நாயர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையுடன் கோபாலகிருஷ்ணா சாலை மற்றும் ராமதெரு சந்திக்கும் இடத்தின் அருகே அமைந்துள்ள சாலையில் இன்று காலை (செப்.28) திடீரென்று பள்ளம் ஏற்பட்டது.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.