Share via:
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தொடர்பாக இடங்களில் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், முக்கிய இடங்களிலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று (செப்.27) சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அலுவகங்களிலும், சிப்காட் மற்றும் ஆவடி பகுதிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (செப்.28) 2வது நாளாக தொடர்ந்து வருமானவரித்துறையினர் தொய்வில்லாமல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, கடலூர், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கூடுதலாக சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.