Share via:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம், திருச்சியில் சீனிவாசன், பெரம்பலூரில் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் சரவணன் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கட்சியின் நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திண்டுக்கல் ஆகியவை பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்கு சுகுமார், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்திற்கு ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு ஜெயசுதா, திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு மோகன், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்திற்கு பாரதிமோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டத்திற்கு எம்.சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்கு சி.வி.சேகர், தேனி கிழக்கு மாவட்டத்திற்கு ராமர், தேனி மேற்கு மாவட்டத்திற்கு ஜக்கையன், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்திற்கு தச்சை கணேசராஜா, திருநெல்வேலி புறநகர் மாவட்டத்திற்கு இசக்கி சுப்பையா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளராக இருந்த சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக இருந்த இளம்பை இரா.தமிழ்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், காவிரி பகுதிக் கழகச் செயலாளராக இருந்த ராம.ராமநாதன் ஆகியோர் இதுவரை வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தி வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.